மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ், மேத்யூ ஃப்ரேம் தமிழ் நாட்டின் ஆனைமலை வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் காடர்கள் எனும் பழங்குடி மக்கள் தமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை யாரும் மறந்த விடக்கூடாது என்பதற்காக தங்களின் பிள்ளைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் காடு, காட்டுயிர்கள் பற்றிய கதைகளை சொல்வது வழக்கம். காடர்கள் சொல்லும் கதைகள் சிலவற்றை கேட்டறிந்த நூலாசிரியர்கள் அவற்றை எழுத்து வடிவில் நமக்கு வழங்கியுள்ளனர். மேத்யூ ஃப்ரேம் கதைகளுக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.